பள்ளிக்கூடத்தில் குடித்துவிட்டு குத்தாட்டம்; 5 மாணவர்கள் நீக்கம்


பள்ளிக்கூடத்தில் குடித்துவிட்டு குத்தாட்டம்; 5 மாணவர்கள் நீக்கம்
x
தினத்தந்தி 6 Dec 2021 11:16 AM IST (Updated: 6 Dec 2021 11:16 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி வளாகத்தில் வகுப்பு தோழர்கள் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 5 மாணவர்கள் மது அருந்திவிட்டு நடனமாடியதாக கூறப்படுகிறது.

கர்னூல்,

கடந்த வாரம் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8 மற்றும் 9 ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் வகுப்பறையில் குடிபோதையில் நடனமாடியுள்ளனர்.இது குறித்த மாணவர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் நேற்று வைரலானதை அடுத்து பள்ளி நிர்வாகம் அவர்கள் 5 பேரையும் பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களில் ஒருவர் தனக்கும் தனது நண்பர்களுக்கும் மது வாங்க மற்ற மாணவர்களிடம் பணம் பெற்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி வளாகத்தில் வகுப்பு தோழர்கள் மதிய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவர்கள் 5 பேரும் மது அருந்திவிட்டு  நடனமாடியதாக கூறப்படுகிறது. 

சக மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு இதை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களின் பைகளை சோதனையிட்டதில், இரண்டு மதுபாட்டில்கள் சிக்கியது.மது அருந்திய  5 மாணவர்களும் வகுப்பில்  இல்லாத நேரத்தில் ஆசிரியர்கள் வகுப்பறையில் அவர்களின் பள்ளி பைகளில் மது இருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.

இதில் நான்கு மாணவர்கள் 8 ஆம் வகுப்பு படிக்கின்றனர் ​​, ஐந்தாவது மாணவர் 9 ஆம் வகுப்பு படிக்கிறார்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் டி.சக்ரு நாயக், மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, நடந்த சம்பவத்தை தெரிவித்தார். 

பின்னர் தலைமை ஆசிரியர் சக்ரு நாயக் அவர்களின் பெற்றோருக்கு மாணவர்களின்  இடமாற்றச் சான்றிதழை வழங்கியுள்ளார், மேலும் அவர்கள் மற்ற குழந்தைகளை  கெடுப்பதால் அவர்களை வேறு பள்ளிக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார். சக்ரு நாயக் கூறுகையில், மற்ற மாணவர்களை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

குழந்தை உரிமைகள் அமைப்பான திவ்யா திஷா சைல்டுலைனின் இயக்குனர் இசிடோர் பிலிப்ஸ், கூறும் போது :

 ஒழுங்கு நடவடிக்கை தீவிரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. "மாணவர்களை வெளியேற்றுவதன் மூலம் பள்ளி வெறுமனே கைகளை கழுவ முடியாது. பள்ளிக்குள் சில திருத்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மாணவரையும் கண்காணிக்கும் பொறுப்பு பள்ளியின் பொறுப்பாகும்," என்று அவர் கூறினார்.

மேலும் "ஒரு மாணவர் குடும்பம் மற்றும் பள்ளியின் துணை தயாரிப்பு, இரு நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும். மாணவர்களை வெளியேற்றுவதற்குப் பதிலாக, தவறான நடத்தைகளைத் தடுக்க பள்ளிகள் ஆலோசனை மற்றும் மனநல ஆலோசனைகளை பெற வேண்டும், ”என்று அவர் மேலும் கூறினார்.

Next Story