எதிர்க்கட்சிகள் அமளி; 5 முறை ஒத்தி வைக்கப்பட்ட மேலவை
நாடாளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சிகளின் அமளியால் 5 முறை அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மேலவையில் கூட்டத்தொடர் தொடங்கியதும், காங்கிரஸ், தி.மு.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், 12 எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் சஸ்பெண்டு செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி அமளியில் ஈடுபட்டன.
இந்த அமளியால் 5 முறை அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. நாள் முழுவதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவையின் துணை தலைவரான ஹரிவன்ஷ் நாராயண் உறுப்பினர்களை இருக்கைக்கு சென்று அமரும்படி கேட்டு கொண்டார்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு உள்பட நாட்டில் எழுந்துள்ள விலை உயர்வு பற்றி விவாதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். எனினும், தொடர்ந்து அமளியில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் அவையின் துணை தலைவர் அவையை நாளை காலை 11 மணிவரை ஒத்தி வைத்துள்ளார்.
Related Tags :
Next Story