புதுச்சேரி முதல்-அமைச்சர் - அமெரிக்க துணை தூதர் சந்திப்பு


புதுச்சேரி முதல்-அமைச்சர் - அமெரிக்க துணை தூதர் சந்திப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 7:52 PM IST (Updated: 7 Dec 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரேவின் சந்தித்து பேசினார்.



புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தூதர் ஜூடித் ரேவின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பில் தூதருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து ரங்கசாமி வரவேற்றார்.

இதனை தொடர்ந்து, புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற சந்திப்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, புதுச்சேரியின் வளர்ச்சி பணிகளுக்கு அமெரிக்க தூதரகம் ஒத்துழைப்பு அளிக்கும் என ஜூடித் ரேவின் உறுதி அளித்ததாகவும், புதுச்சேரியில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அரசு அளிக்கும் ஆதரவு குறித்து பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story