தேசிய செய்திகள்

கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகம் + "||" + Coronavirus Report in Kerala on 6th December

கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகம்

கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு அதிகம்
கேரளாவில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும் போது இன்றைய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 3 ஆயிரத்து 277-ஐ விட அதிகமாகும். 

இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 51 லட்சத்து 73 ஆயிரத்து 854 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 180 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்து 91 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 40 ஆயிரத்து 72  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏற்கனவே உயிரிழந்து இறப்பு கணக்கில் சேர்க்கப்படாத 106 உயிரிழப்புகள் தற்போது மறு கணக்கீட்டின் படி தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.96 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.19 கோடியாக அதிகரித்துள்ளது.
3. பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் முன்னேற்றம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
4. இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் நேற்று 3.47 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27.65 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34.66 கோடியாக அதிகரித்துள்ளது.