தேசிய செய்திகள்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் - மனைவி உள்பட 13 பேர் பலி - விமானப்படை அறிவிப்பு + "||" + Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the Mi-17V5 which crash in Coonoor

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் - மனைவி உள்பட 13 பேர் பலி - விமானப்படை அறிவிப்பு

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் - மனைவி உள்பட 13 பேர் பலி - விமானப்படை அறிவிப்பு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

ஹெலிகாப்டர் குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மிதுலிஹா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகா: பிபின் ராவத் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பதிவிட்டவர் கைது
பிபின் ராவத்துக்கு எதிராக சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாக மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
2. பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு: பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளின் மீது வழக்குப்பதிவு..!
பிபின் ராவத் இறப்பு குறித்து அவதூறு பரப்பியதாக பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
3. பிபின் ராவத் மகள்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய உத்தரகாண்ட் முதல்-மந்திரி
பிபின் ராவத் மகள்களை உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
4. பிபின் ராவத் - மனைவி அஸ்தி கங்கை நதியில் கரைப்பு
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் - மனைவி அஸ்தியை மகள்கள் கங்கை நதியில் கரைத்தனர்.
5. பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும் - ஜனாதிபதி
பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.