மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.களில் காலியாக உள்ள 9,800 ஆசிரியர் பணியிடங்கள்: மத்திய அரசு தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Dec 2021 1:44 AM IST (Updated: 9 Dec 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.களில் 9,800 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், ஐ.ஐ.டி.கள் மற்றும் ஐ.ஐ.எம். என உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் நேற்று பதில் அளித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 6,229 ஆசிரியர் பணயிடங்கள் காலியாக உள்ளன. இதைப்போல ஐ.ஐ.டி.கள் மற்றும் ஐ.ஐ.எம்.களில் முறையே 3,230 மற்றும் 403 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன’ என்று தெரிவித்தார்.

ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்தவரை, மத்திய பல்கலைக்கழகங்களில் 13,782, ஐ.ஐ.டி.களில் 4,182, ஐ.ஐ.எம்.களில் 543 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை என தெரிவித்த சுபாஷ் சர்க்கார், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய வழிமுறைகளை பின்பற்றி தேவையான விளம்பரங்களை நிறுவனங்கள் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

Next Story