பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Dec 2021 4:54 AM IST (Updated: 9 Dec 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

பாலாசோர், 

இந்திய, ரஷிய ஒத்துழைப்பில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போர் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய பிரமோஸ் ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது.

ஒடிசா மாநில கடற்கரையை ஒட்டிய சந்திப்பூர் ஏவுகணை சோதனை தள பகுதியில் ஒரு சுக்கோய் 30 போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை செலுத்தப்பட்டது. வானில் குறிப்பிட்ட வளைவுப்பாதையில் சென்ற அந்த ஏவுகணை, அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்தது. பிரமோஸ் ஏவுகணை மேம்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல். இந்த ஏவுகணையின் முக்கிய பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என பாதுகாப்புத் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் விமானத்தில் இருந்து இதுபோல பிரமோஸ் ஏவுகணை கடந்த ஜூலை மாதம் ஏவப்பட்டு பரிசோதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றது தொடர்பாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), இந்திய விமானப்படை ஆகியவற்றுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளரும், டி.ஆர்.டி.ஓ. தலைவருமான ஜி.சதீஷ் ரெட்டியும் இந்த ஏவுகணை சோதனையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டியுள்ளார்.

Next Story