டெல்லி: கோர்ட்டில் வெடித்து சிதறிய மர்மப்பொருள் - பரபரப்பு


டெல்லி: கோர்ட்டில் வெடித்து சிதறிய மர்மப்பொருள் - பரபரப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 2:38 PM IST (Updated: 9 Dec 2021 2:38 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி ரோகிணி கோர்ட்டில் இன்று மர்மப்பொருள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி,

டெல்லி ரோகிணி கோர்ட்டு வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் மர்மப்பொருள் வெடித்து சிதறியது. வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த மர்மப்பொருள் வெடித்து சிதறியுள்ளது.

இந்த வெடிவிபத்தில் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார். இந்த வெடிவிபத்தை தொடர்ந்து கோர்ட்டு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கோர்ட்டு வளாகம் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

கோர்ட்டு அறை 102-ல் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த லேப்டாப் வைக்கும் பையில் இருந்த மர்மப்பொருள் வெடித்துள்ளது.

இந்த வெடிவிபத்தை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) குழு சம்பவம் நடத்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறது. மர்மப்பொருள் வைக்கப்பட்டிருந்த அந்த லேப்டாப் பையில் இருந்து ஒயர்கள் மற்றும் சில கருப்பு பாகங்கள் வெடித்து சிதறியுள்ளன. இதனால், இந்த வெடிவிபத்து என்பது வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

Next Story