அணைகள் புனரமைப்பு; தமிழகத்திற்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்


அணைகள் புனரமைப்பு; தமிழகத்திற்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2021 10:01 PM IST (Updated: 9 Dec 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்துக்கு தமிழகத்திற்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பதிலளித்து பேசினார். அப்போது அவர், அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள 59 அணைகள் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்துக்கு தமிழகத்திற்கு ரூ.1,064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Next Story