இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை


இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 10 Dec 2021 8:24 AM IST (Updated: 10 Dec 2021 8:24 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் பூஸ்டர் டோஸுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

ஜெனீவா,

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா 23 பேருக்கு பாதித்துள்ள நிலையில் கொரோனா தொற்று வைரசை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி போடப்படுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று டெல்லியில் நிபுணர்கள் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாகவும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது நிபுணர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்தன. பூஸ்டர் தடுப்பூசி தேவை இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

கொரோனா பரவல் சூழ்நிலைக்கு ஏற்ப அடுத்த கட்ட முடிவு எடுக்கலாம் என்று சில நிபுணர்கள் தெரிவித்தனர். சில நிபுணர்கள் மட்டுமே 3-வது கட்ட தடுப்பூசியை மத்திய சுகாதாரத் துறை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கூறினார்கள். நிபுணர்களின் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக இறுதி முடிவும் எடுக்க முடியவில்லை. எனவே பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. அதன் பின்னர் எடுக்கும் முடிவுகளை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப் பட்டுள்ளது.

Next Story