புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் பெயர்: உத்தரகாண்ட் அரசு முடிவு


புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் பெயர்: உத்தரகாண்ட் அரசு  முடிவு
x
தினத்தந்தி 10 Dec 2021 5:16 PM IST (Updated: 10 Dec 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

டேராடூன்,

மறைந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும்  சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்டது.   இதனை ஏற்று பிபின்ராவத்தின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


Next Story