நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 25 பேருக்கும் கடுமையான அறிகுறிகள் இல்லை; அரசு தகவல்


நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 25 பேருக்கும் கடுமையான அறிகுறிகள் இல்லை; அரசு தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:23 PM IST (Updated: 10 Dec 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் ஒமைக்ரான் பாதித்த 25 பேருக்கும் கடுமையான அறிகுறிகள் தென்படவில்லை என்று அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,


மத்திய சுகாதா அமைச்சகத்தின் இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நாட்டில் 25 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  ஆனால், ஒருவருக்கும் கடுமையான அறிகுறிகள் தென்படவில்லை.

ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட அனைத்து நபர்களுக்கும் லேசான அறிகுறிகளே உள்ளன.  மொத்தம் கண்டறியப்பட்ட பாதிப்புகளில் 0.04 சதவீதத்திற்கும் குறைவான பாதிப்புகளே உள்ளன என கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 24ந்தேதி வரை 2 நாடுகளில் பாதிப்புகள் இருந்தன.  ஆனால், இந்த எண்ணிக்கை 59 நாடுகளாக உயர்ந்து உள்ளது என அவர் கூறியுள்ளார்.


Next Story