கர்நாடகாவில் மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்: காங்கிரஸ்


கர்நாடகாவில் மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம்: காங்கிரஸ்
x
தினத்தந்தி 11 Dec 2021 9:58 PM IST (Updated: 11 Dec 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்

பெங்களூரு,

மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்காது என்று மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டி.கே.சிவக்குமார்  கூறியதாவது:-

கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை, பெலகாவியில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது அமல்படுத்த பா.ஜனதா அரசு முன்வந்திருக்கிறது. இந்த சட்டத்தை கர்நாடகத்தில் அமல்படுத்த காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. 

இந்த சட்டத்தை அமல்படுத்தினால் கர்நாடகத்தில் முதலீடு செய்ய பிற நாடுகளை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்கள் தயங்குவார்கள். வியாபாரம், தொழில் பாதிக்கப்படும். கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், இந்த சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விடாது”என்றார். 


Next Story