வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம்; விவசாயிகள் சிங்கு பகுதியில் இருந்து வாபஸ்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிங்கு பகுதியில் இருந்து வாபஸ் பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாக சென்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்து வருகிறது.
இந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யக்கோரியும் லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் அவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் விவசாயிகள் குவிந்தனர்.
இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்றும் குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.
எனினும், சட்டங்கள் முழுமையாக வாபஸ் பெறப்படும் வரை போராட்டங்கள் தொடரும என விவசாய அமைப்புகள் கூறி வந்தன. இந்த நிலையில், டெல்லி-அரியானா எல்லையில் சிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அந்த பகுதியில் இருந்து வாபஸ் பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.
இதற்காக அவர்கள் நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் வீடு திரும்பி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்தது.
Related Tags :
Next Story