சரயு நதிநீர் திட்டம்: உத்தரபிரதேச அரசு மீது அகிலேஷ் யாதவ் தாக்கு
சரயு நதிநீர் திட்டம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு மீது அகிலேஷ் யாதவ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நடந்து வந்த சரயு நதிநீர் கால்வாய் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதற்கு சில மணி நேரத்துக்கு முன் சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், தனது ஆட்சிக்காலத்தில் இந்த திட்டம் 4-ல் 3 பங்கு பணிகள் முடிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள தற்போதைய அரசுக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘உலகில் 2 வகையான மக்கள் உள்ளனர். சிலர் உண்மையிலேயே உழைப்பவர்கள், சிலர் அடுத்தவர்களின் உழைப்பை சொந்தமாக்குபவர்கள். இதுதான் சமாஜ்வாடி அரசுக்கும், தற்போதைய ரிப்பன் வெட்டும் அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு’ என கூறியிருந்தார். இதற்கு மேற்படி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story