எளிய மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி
கடந்த 7 ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசாங்கம் மக்களுக்கு செய்தது என்ன? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெய்பூர்,
காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 70 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் மோடி அரசாங்கம் தனது தொழில் அதிபர் நண்பர்களுக்கு விற்பனை செய்து வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ஜெய்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி கூறுகையில், “ தேர்தல் வரும் சமயத்தில் சீனா மற்றும் பிற நாடுகள், மதவாதம், இனவாதம் குறித்து பேசும் பாஜகவினர் மக்களின் சுமைகளை பற்றி பேசுவதில்லை. கடந்த 7 ஆண்டு கால ஆட்சியில் மோடி அரசாங்கம் மக்களுக்கு செய்தது என்ன? “அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்வது உங்கள் பொறுப்பு ஆகும். ஏன் இவ்வளவு பணவீக்கம் நாட்டில் உள்ளது என்பதை கேட்க வேண்டியதும் உங்கள் பொறுப்புதான்.
இரண்டு வகையான அரசாங்கங்கள் உள்ளன. முதல் வகையான அரசாங்கத்தின் இலக்கு என்னவெனில் பொதுமக்களுக்கு சேவை, அர்ப்பணிப்பு உண்மயாக பணியாற்றுவது ஆகும். மற்றொரு அரசாங்கம் உள்ளது.அதன் இலக்கு என்னவெனில், பொய்கள், பேராசை,கொள்ளையடிப்பது ஆகும்.
தற்போதைய மத்திய அரசின் இலக்கு பொய்கள், பேராசை மற்றும் கொள்ளை என்றே உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு என்ன செய்தது என மோடி அரசு தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். 70 ஆண்டுகளை விட்டுவிடுங்கள், கடந்த 7 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story