சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்-க்கு எதிராக நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ரஞ்சன் கோகாய் செய்திச் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, சபை குறித்து தெரிவித்த கருத்துக்காக அவருக்கு எதிராக திங்கள்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்.பி.மவுசம் நூர், சிறப்புரிமை தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து உள்ளார்.
டிசம்பர் 9 அன்று தனியார் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாகப் பேட்டி அளித்த ரஞ்சன் கோகாய் ,மேல்சபையில் அவரது வருகை குறித்து கேட்டபோது, நான் பேச வேண்டிய முக்கியமான விஷயங்கள் இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் நான் சபைக்கு செல்கிறேன். நான் ஒரு நியமன உறுப்பினர், எந்த கட்சியாலும் நான் நடத்தப்படவில்லை" என தெரிவித்திருந்தார்.
நீதிபதி கோகாயின் அறிக்கைகள் மாநிலங்களவையை அவமதிப்பதாகவும், சபையின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும், சிறப்புரிமையை மீறுவதாகவும் உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் இன்று தாக்கல் செய்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story