மேற்குவங்காளத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது
மேற்குவங்காளத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்கத்தா,
மேற்குவங்காளத்தில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தங்கி சட்டவிரோதமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்களை கடத்தி அனுப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த மபிஷூல் ரஹ்மான் என்பவரை லக்னோ பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வங்காளதேசத்தில் இருந்து பலர் மேற்குவங்காளத்தில் சட்டவிரோதமாக நுழைந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, மேற்குவங்காளத்தின் மதினிப்பூர் மாவட்டம் ஆனந்தோபூர் பகுதியில் லக்னோ பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்த 17 வங்காளதேசத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வங்காளதேசத்தினரிடமிருந்த ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்பட பல்வேறு போலி இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story