திரிணாமுல் காங்கிரஸ் என்றால்... புது விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி


திரிணாமுல் காங்கிரஸ் என்றால்... புது விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 14 Dec 2021 12:52 AM IST (Updated: 14 Dec 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

திரிணாமுல் காங்கிரஸ் என்றால் என்ன பொருள் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி புது விளக்கம் அளித்து உள்ளார்.

பனாஜி,

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி கோவாவில் முகாமிட்டு கட்சி தொண்டர்களிடையே பேசி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

அவர் பனாஜி நகரில் பேசும்போது, திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்.சி.) என்றால் டெம்பிள் (கோவில்), (மொஸ்க்) மசூதி மற்றும் (சர்ச்) கிறிஸ்தவ ஆலயம் என ஆங்கிலத்தில் பொருள்படி கூறினார்.

நாம் பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுகிறோம்.  வெற்றி வாய்ப்பு இருக்கிறதா?  நாம் வெல்வோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தீர்கள் என்றால், பின் வாங்காதீர்கள்.  முன்னேறுங்கள் என கூறியுள்ளார்.


Next Story