பாஜக ஆளும் மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
வாரணாசி,
பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள் பயணமாக வாரணாசி சென்றுள்ள பிரதமா் மோடி நேற்று காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் ரூ.339 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டுத் திட்டங்களை திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் மற்றும் துணை மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.
Related Tags :
Next Story