உத்தரகாண்ட் சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத் பயணித்த கார் விபத்து
இந்த விபத்தில் காரில் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை மந்திரி தன்சிங் ராவத், இன்று தனது காரில் பாவ்ரி மாநிலத்தில் இருந்து டேராடூன் சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளானது. அவருடன் உத்தரகாண்ட் மாநில கூட்டுறவு கூட்டமைப்பு தலைவர் மத்வார் சிங் ராவத் மற்றும் பாவ்ரி மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் நரேந்திர ராவத் ஆகியோர் காரில் இருந்தனர்.
இந்த விபத்தில் காரில் சென்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் சென்ற கார் ஒருபுறமாக கவிழ்ந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், காயமடைந்த அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து குறித்த தகவலறிந்து, உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, சுகாதாரத்துறை மந்திரியை போனி தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story