ஒருதலைக்காதல்; சகோதரிகள் மீது ஆசிட் வீசிய இளைஞன்
ஒருதலைக்காதலால் சகோதரிகள் மீது ஆசிட் வீசிய இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பஹ்பட் மாவட்டம் ரோஷகர் கிராமத்தை நபருக்கு தரன்மும் (16), மண்டஷா (14) என இரு மகள்கள் உள்ளனர்.
இதில், தரன்முமை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளான். காதலுக்கு தரன்மும் சம்மதம் தெரிவிக்காததால் அவரை அந்த இளைஞன் கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்துவந்துள்ளான்.
இந்நிலையில், தந்தை வேலைக்கு சென்றதால் தரன்மும் அவரது சகோதரி மண்டஷாவும் நேற்று இரவு வீட்டில் உறக்கிக்கொண்டிருந்தனர். அப்போது, அந்த வீட்டிற்கு வந்த அந்த இளைஞன் தான் மறைத்து கொண்டுவந்த ஆசிட்டை உறங்கிக்கொண்டிருந்த தரன்மும் மற்றும் அவரது சகோதரி மண்டஷா மீது வீசிவிட்டு தப்பியோடினான்.
ஆசிட் வீசப்பட்டதில் படுகாயமடைந்த சகோதரிகள் இருவரும் அலறி கூச்சல் எழுப்பியுள்ளனர். இந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சகோதரிகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான தரன்முமின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சகோதரிகள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச்சென்ற இளைஞனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைகாதலால் சகோதரிகள் மீது ஆசிட் வீசி கைது செய்யப்பட்ட அந்த இளைஞனின் பெயரை போலீசார் வெளியிடவில்லை.
Related Tags :
Next Story