இந்திய விளையாட்டு ஆணையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 17 பாலியல் புகார்கள் - அனுராக் தாக்கூர்
புகார்கள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படுவதை தான் உறுதி செய்வதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
புதுடெல்லி,
2018 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 17 பாலியல் துன்புறுத்தல் புகார்களைப் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) பெற்றுள்ளதாக விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடரின் நேற்றைய கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கேள்விகளுக்கு விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்கூர் பதில் அளித்து பேசினார் .
அப்போது அவர் பேசியதாவது :
பெங்களூரு, டெல்லி என்சிஆர், திருவனந்தபுரம், காந்திநகர், லக்னோ மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள இந்திய விளையாட்டு மையங்களில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் பதிவாகியுள்ள 17 வழக்கு களில், 2018-ல் 7 வழக்குகளும் 2019-ல் 6 வழக்குகளும் , 2020-ல் ஒரு வழக்கும் , நடப்பாண்டில் 3 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுக்க பெண் அதிகாரி தலைமையிலான உள் புகார்க் குழு மற்றும் 24x7 ஹெல்ப்லைன் எண் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க விளையாட்டு அமைச்சகம் ஒரு செயல்முறையை அமைத்துள்ளது .அதே நேரத்தில் புகார்கள் அனைத்தும் விரைவில் தீர்க்கப்படுவதை நான் உறுதி செய்கிறேன் .
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story