காங்கிரசில் இணைகிறாரா ஹர்பஜன் சிங், சித்துவின் டுவிட்டால் பரபரப்பு


காங்கிரசில் இணைகிறாரா ஹர்பஜன் சிங், சித்துவின் டுவிட்டால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 10:01 PM IST (Updated: 15 Dec 2021 10:01 PM IST)
t-max-icont-min-icon

ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்று பாராட்டி சித்து பதிவிட்டுள்ளார்.

அமிர்தசரஸ், 

 பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜன் சிங்குடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹர்பஜன் சிங்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சித்து,  ”பல்வேறு சாத்தியங்களை உள்ளடக்கிய படம்” எனப்பதிவு இட்டு இருந்தார். 

ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தால் ஹர்பஜன் சிங் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சித்துவின் இந்த டுவிட் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.  முன்னதாக, பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலை ஹர்பஜன் சிங் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


Next Story