கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த ஃபாஸ்டேக் வசூல் ரூ.1.18 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்


கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த ஃபாஸ்டேக் வசூல் ரூ.1.18 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2021 12:19 AM IST (Updated: 16 Dec 2021 6:13 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 5 ஆண்டுகளில் ஃபாஸ்டேக் வசூல் மூலம் ரூ.1,18,881 கோடி வருமானம் கிடைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்துள்ளதா என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்க்ரி, 2016-17 ஆம் நிதியாண்டில் நாடு முழுவதும் ஃபாஸ்டேக் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து ஆண்டு தோறும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக ஃபாஸ்டேக் திட்டம் தொடங்கப்பட்ட 2016-17 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த சுங்க வசூல் ரூ.17,942 கோடியாக இருந்தது என்றும் அதனை தொடர்ந்து 2017-18 ஆம் நிதியாண்டில் ரூ.21,948 கோடியாகவும், 2018-19 ஆம் நிதியாண்டில் ரூ.24,396 கோடியாகவும், 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.26,850 கோடியாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.27,744 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ஃபாஸ்டேக் வசூல் மூலம் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 881 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story