கொரோனா 2-வது அலையின் போது குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்தது - ஸ்மிரிதி இரானி தகவல்


கொரோனா 2-வது அலையின் போது குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்தது - ஸ்மிரிதி இரானி தகவல்
x
தினத்தந்தி 16 Dec 2021 5:46 AM IST (Updated: 16 Dec 2021 5:46 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் போது குடும்ப வன்முறை வழக்குகள் குறைந்ததாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

 மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது குடும்ப வன்முறை தொடரான ஒரு கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“கடந்த ஆண்டு கொரோனா பரவத் தொடங்கியபோது, ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 3 ஆயிரத்து 748 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையின்போது, ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 ஆயிரத்து 582 குடும்ப வன்முறை வழக்குகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைந்துள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story