மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய படை கோரி பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி


மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய படை கோரி பாஜக தாக்கல் செய்த மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 16 Dec 2021 1:21 PM IST (Updated: 16 Dec 2021 1:21 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய படையினரை ஈடுபடுத்தக்கோரி பாஜக தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 144 வார்டுகளை கொண்ட கொல்கத்தா மாநகராட்சியில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கொல்கத்தா மாநகராட்சியை 2010 முதல் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றி வருகிறது. 

இதற்கிடையில், வரும் மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற்று கொல்கத்தா மாநகராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில், கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பாதுகாப்பு பணியில் மாநில போலீசாருக்கு பதிலாக மத்திய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த வேண்டும் என கோரி கொல்கத்தா ஐகோர்ட்டில் பாஜக மனு தாக்கல் செய்தது.

பாஜக தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட்டு, மாநகராட்சி தேர்தலில் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியாது. கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் மாநில காவல்துறையின் பொறுப்பின் கீழ் நடைபெறும்’ என தெரிவித்து பாஜக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.

Next Story