மார்கழி மாதப்பிறப்பையொட்டி திருப்பதியில் இன்று முதல் ஆண்டாள் திருப்பாவை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய மாநில அரசுகளிடம் தேவஸ்தனம் சார்பில் அனுமதி கேட்கப் பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
இந்த நிலையில் மார்கழி மாதப்பிறப்பையொட்டி திருப்பதி கோவிலில் இன்று முதல் சுப்ரபாத சேவைக்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் அதிகாலை சுப்ரபாதம் பாடி ஏழுமலையானை துயில் எழுப்புவது வழக்கம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாத சேவைக்கு பதிலாக ஆண்டாள் திருப்பாவை பாடப்படும். மார்கழி மாதம் பிறந்ததையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் திருப்பாவை பாடப்பட்டது.
மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவையே பாடப்படும். தை மாதத்தில் இருந்து வழக்கம்போல் சுப்ரபாத சேவை நடக்கும். திருப்பதியில் நேற்று 33,898 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 17,345 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.15 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Related Tags :
Next Story