கோவா சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Dec 2021 1:37 AM IST (Updated: 17 Dec 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

கோவா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

பனாஜி, 

அடுத்தாண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் கோவாவில் இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடும் வகையில் காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணிகளை ஆற்றி வருகிறது.

இந்நிலையில் கோவா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 தொகுதிகளில் போட்டியிடுவோர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் கோவா முதல்-மந்திரி திகம்பர் வசந்த் காமத் கோவாவின் மார்கோ தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். திகம்பர் வசந்த் காமத் கடந்த 2007 முதல் 2012 வரை கோவா முதல்-மந்திரியாக இருந்தவர், தற்போது கோவா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். அதேபோல கடந்த 2019இல் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த சுதிர் கனோல்கர் கோவாவின் மபுசா சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்

மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுவோர் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது தலீகா தொகுதி- டோனி ரோட்ரிக்ஸ்,  போண்டா தொகுதியில் - ராஜேஷ் வெரேங்கர்,  மர்முகா தொகுதி- சங்கல்ப் அமோன்கர்,  கர்டோரிம் தொகுதி- அலெக்ஸியோ ரெஜினால்டோ லோரென்கோ, குன்கோலிம் தொகுதி- யூரி அம்மாவோ, க்யூபெம் தொகுதி - ஆல்டோன் டி'கோஸ்டா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய தேர்தல் குழுவால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story