அகில இந்திய மேயர்கள் மாநாடு - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேசம்,
நகர்ப்புறத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் குறைப்பாட்டுப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மத்திய அரசு பலவகையான திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதற்காக சமீப காலங்களில் பல்வேறு புதிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த முயற்சிகளுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச மாநிலம் நகர்ப்புற உள்கட்டமைப்பில் வெகுவான முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் , வாரணாசியில் நடைபெறும் அகில இந்திய மேயர்கள் மாநாட்டை பிரதமர் மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் "புதிய நகர்ப்புற இந்தியா " என்ற மையப்பொருளில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சியில் மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசின் முக்கிய சாதனைகளை எடுத்துக்காட்டும் கண்காட்சி ஒன்றுக்கும் டிசம்பர் 17 முதல் 19 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல் -மந்திரி , மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.
Related Tags :
Next Story