கொரோனா காலத்தில் 9% சிறு, குறு நிறுவனங்கள் மூடல் - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
கொரோனா காலத்தில் பொருளாதாரம் பலவீனம் அடைந்ததாகவும், வேலை இழப்பு ஏற்பட்டதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 16-ந்தேதி, மக்களவையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொடர்பாக நான் கேள்விகள் எழுப்பினேன். அவற்றுக்கு மத்திய அரசு தரப்பில் அளித்த பதில்களில், கொரோனா காலத்தில் 9 சதவீத சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஒப்புக்கொண்டனர். பொருளாதாரம் பலவீனம் அடைந்ததாகவும், வேலை இழப்பு ஏற்பட்டதாகவும் தான் இதற்கு அர்த்தம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story