கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேருக்கு பரிசோதனை
கர்நாடகத்தில் ஒமைக்ரான் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 39 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று முன்தினம் 5 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர்கள் 5 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர், அங்கிருந்து டெல்லிக்கும் வந்திருந்ததும், டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு வந்திருந்ததும் தெரியவந்தது. அவருடன் நேரடியாக 12 பேர் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய தகவல்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர்.
இதுபோல், நைஜீரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்திருந்தவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக ஒமைக்ரான் வைரஸ் பாதித்த நபர்களுடன், 39 பேர் தொடர்பில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதித்த நபர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்த 25 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்திருப்பதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story