சண்டைபோட்ட காதலி; விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்து சமாதானபடுத்த திருடிய காதலன்
சண்டை போட்ட காதலியை சமாதானபடுத்த விலை உயர்ந்த பொருட்களை பரிசளிக்க நண்பர்களுடன் சேர்ந்து திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லி சரோஜினி நகரை சேர்ந்தவர் ஆதித்யா குமார். இவர் பன்னாட்டு நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை ஆதித்யா குமார் தனது வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த லேப்டாப்,செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை திருடிச்சென்றனர்.
இந்த திருட்டு தொடர்பாக ஆதித்யா குமார் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
குற்றாவளிகளை தேடி வந்த போலீசார் நேற்று சரோஜினி நகரில் ஒரு பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த அந்த 3 பேர் தான் ஆதித்யா குமார் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஷம்ஹம் (20), ஆசிப் (19), முகமது ஷரிபுல் முல்லா (41) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஷம்ஹம் கடந்த ஜூலை மாதம் செல்போன் திருட்டில் கைதாகி சிறை சென்றுள்ளான். சிறையில் ஷம்ஹக்கும் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஆசிப், முகமது முல்லாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே மூவரும் சிறையில் இருந்து கடந்த மாதம் விடுதலையாகியுள்ளனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்து விடுதலையான ஷம்ஹம் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண் இவரை காதலித்துள்ளார். சமீபத்தில் காதலியான அந்த பெண் ஷம்ஹமுடன் சண்டை போட்டுள்ளார். அந்த சண்டைக்கு பின் அந்த பெண் ஷம்ஹமிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது காதலியை தன்னிடம் பேசவைக்கவேண்டும் என்பதற்காக அவருக்கு விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை கொடுத்து சமாதானப்படுத்த வேண்டும் என ஷம்ஹம் திட்டமிட்டுள்ளார்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்க பணம் இல்லாதது குறித்து தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை திடுடலாம் என நண்பர்களுடன் இணைந்து ஷம்ஹம் முடிவு செய்துள்ளார். திருடும் விலை உயர்ந்த பொருட்களை காதலியிடம் கொடுத்து அவரை சமாதானப்படுத்தி தன்னுடன் பேசவைத்துவிடலாம் என அவர் எண்ணியுள்ளார்.
இதனால், நண்பர்கள் ஆசிப், முல்லாவுடன் இணைந்து ஷம்ஹம் சரோஜினி நகரில் உள்ள ஆதித்யா குமார் வீட்டிற்கு சென்று அவரை கட்டிப்போட்டுவிட்டு லேப்டாப், செல்போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஷம்ஹம் மற்றும் அவரது நண்பர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story