வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாய சங்க தலைவர் புதிய கட்சி தொடங்கினார்...!


வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாய சங்க தலைவர் புதிய கட்சி தொடங்கினார்...!
x
தினத்தந்தி 18 Dec 2021 6:49 AM GMT (Updated: 18 Dec 2021 6:49 AM GMT)

அரசியல் முழுவது மாசடைந்துவிட்டது என்று கூறிய விவசாய சங்க தலைவர் ’சம்யுக்தா சங்ஹர்ஷ்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் ஒராண்டுக்கும் மேலாக  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து, விவசாய சங்கங்கள் தங்களது போராட்டத்தை கடந்த டிசம்பர் 9-ம் தேதி முடித்துக்கொண்டன. 

இதற்கிடையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான குர்னம் சிங் சதூனி தான் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக நேற்று அறிவித்தார். 

இந்நிலையில்,  ’சம்யுக்தா சங்ஹர்ஷ்’ என்ற பெயரில் குர்னம் சிங் சதூனி இன்று தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.

புதிய அரசியல் கட்சி தொடங்கியதன் நிகழ்ச்சியில் பேசிய விவசாய சங்க தலைவர் குர்னம் சிங் சதூனி, அரசியல் மாசடைந்துவிட்டது. அதை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கொள்கைவகுப்பாளர்கள் முதலாளித்துவத்தை ஊக்குவிக்கின்றனர். முதலாளிகளுக்கு ஆதரவாக கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. சாதாரண மக்களுக்கும், ஏழைகளுக்கும் எதுவும் செய்யப்படவில்லை. ஆகையால், நாங்கள் புதிய கட்சியை தொடங்கியுள்ளோம்’ என்றார்.

Next Story