மும்பையில் பேருந்தில் பயணம் செய்ய புது கட்டுப்பாடுகள்...


மும்பையில் பேருந்தில் பயணம் செய்ய புது கட்டுப்பாடுகள்...
x
தினத்தந்தி 18 Dec 2021 8:15 PM IST (Updated: 18 Dec 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பேருந்தில் பயணம் செய்ய முழு அளவில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.



மும்பை,

நாட்டில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டபோது மராட்டியம் அதிக இலக்கானது.  அதிக பரவலை சந்தித்தது.  இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையிலும் மராட்டியம் (40) முதல் இடத்தில் உள்ளது.  இதனை தொடர்ந்து, டெல்லி 22 மற்றும் ராஜஸ்தான் 17 உள்ளது.

இந்த நிலையில், மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள உத்தரவில், கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.  விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அவர்களுக்கு எதிராக வார்டு அளவிலான படையினர் நடவடிக்கை எடுத்திடுவார்கள்.  பேருந்து போக்குவரத்து உள்பட பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முழு அளவில் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story