மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்வு


மராட்டியத்தில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Dec 2021 2:03 AM IST (Updated: 20 Dec 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 4 பேர் மும்பை விமான நிலையத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்கள் ஆவர். அதில் 2 பேர் தான்சானியாவில் இருந்தும், 2 பேர் இங்கிலாந்தில் இருந்தும் வந்து உள்ளனர். 4 பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். 

தற்போது அவர்கள் அந்தேசி செவன்ஹில்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 4 பேரில் 2 பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் அவுரங்காபாத்தையும் சேர்ந்தவர். ஒருவர் மட்டும் மும்பையில் வசித்து வருகிறார். 

இதேபோல நோய் பாதித்த மற்ற 2 பேரும் புனே பிம்பிரி சிஞ்வட், புனே புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதில் புனே புறநகரை சேர்ந்த 5 வயது சிறுவன் ஏற்கனவே ஒமைக்ரான் பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவன். 

இதுவரை மாநிலத்தில் 54 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக மும்பையில் 22 பேரும், புனே பிம்பிரி சிஞ்சவட்டில் 11 பேரும், புனே புறநகரில் 7 பேரும், புனே மாநகரப்பகுதியில் 3 பேரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர சத்தாராவில் 3 பேரும், கல்யாண் டோம்பிவிலியில் 2 பேரும், உஸ்மனாபாத்தில் 2 பேரும், புல்தானா, நாக்பூர், லாத்தூர், வசாய் விராரில் தலா ஒருவரும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story