எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்


எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம்
x
தினத்தந்தி 20 Dec 2021 12:34 PM IST (Updated: 20 Dec 2021 12:39 PM IST)
t-max-icont-min-icon

நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் கொண்டுவரப்படுகிறது என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.

புதுடெல்லி,

ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அவலம் இன்னும் தொடர்கிறது. குறிப்பாக ஒரே நபர் சொந்த ஊரிலும், தற்போது வசிக்கிற ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகிறது. 

இதை முடிவுக்கு கொண்டு வர வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் ஒருவர் இடம் பெற முடியாத நிலை வந்து விடும்.

இதற்கான தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2021, வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களிடமும், புதிதாக வாக்காளர்களாக சேருவோரிடமும் ஆதார் எண்ணை கேட்டுப்பெற வழிவகை செய்யும். இந்த மசோதாவை மக்களவையில் மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ  தாக்கல் செய்தார். 

இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ,  நியாயமாக வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டம் கொண்டுவரப்படுகிறது” என்றார்.  எதிர்க்கட்சிகள் அமளி நீடித்ததால்  மக்களவை பிற்பகல்  2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 


Next Story