முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றே முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக நிறைவு பெற்றதாக இரு அவை தலைவர்கள் அறிவித்தனர்.
மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது மசோதாக்கள் நிறைவேற்றபட்டுள்ளதாகவும் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று நிறைவு செய்யப்படுவதாக அறிவித்தனர்.
நவம்பர் 29-ல் தொடங்கிய கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் செய்யப்பட்டன.
பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதாவும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் சீர்திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முன்னதாக கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது.
குளிர்கால கூட்டத்தொடரில் லக்கிம்பூர் கேர் வன்முறையில் மத்திய மந்திரி அஜஸ் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பின. குளிர்கால கூட்டத்தொடரில் 12 மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் தொடர் அமளி நிலவியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story