அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்த மணமக்கள்... உடல் உறுப்பு தானம் செய்த விருந்தினர்கள்...!


அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்த மணமக்கள்... உடல் உறுப்பு தானம் செய்த விருந்தினர்கள்...!
x
தினத்தந்தி 23 Dec 2021 9:53 AM IST (Updated: 23 Dec 2021 9:53 AM IST)
t-max-icont-min-icon

மணமக்கள் வேண்டுகோளின் பேரில் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக விருந்தினர்கள் தெரிவித்தனர்.

ஒடிசா,

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பெர்ஹாம்பூர் நகரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  திருமண விழா ஒன்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் மணமக்கள் இருவரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து தங்கள் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி புதுமணத் தம்பதிகளான பிஜ்யா குமார் (29) மற்றும் ஸ்ருதி (27) இருவரும் திருமணம் நடைபெற்ற மண்டபத்திற்கு அருகில் நடைபெற்ற  முகாமில் இரத்த தானம் செய்துள்ளனர்.

அதை தொடர்ந்து திருமண மேடையிலே தங்களது உடல் உறுப்புகளையும் தானம் செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர். பின்னர் தங்கள் திருமண விழாவிற்கு வந்த விருந்தினர்களிடம் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்ய கோரிக்கை விடுத்தனர். உறுதிமொழி எடுத்து விருந்தினர்கள் அது சமந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மணமகனின் தந்தை மோகன் ராவ் (ஓய்வுபெற்ற அரசு ஊழியர்) கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் புனித நூல் . அதில் பொதிந்துள்ள இலட்சியங்களை மக்கள் அறிந்திருப்பது அவசியம். 2019-ம் ஆண்டு எனது மூத்த மகனுக்கு மணமகளின் பெற்றோரை சமாதானப்படுத்தி இந்த வகையான திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல் தற்போதும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ருதியின் பெற்றோரை,அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரில் திருமணம் செய்து வைக்குமாறு ராவ் சமாதானப்படுத்தினார். அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

Next Story