சிறுமிக்கு பாலியல் தொல்லை: 8 முறை கத்தியால் குத்திய நபர் கைது
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை 13 வினாடிகளில் எட்டு முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
கோபால்கஞ்ச்,
பீகார் மாநிலத்தில் பாலியல் உறவுக்கு உடன்படாத 8-ம் வகுப்பு மாணவியை மர்ம நபர் ஒருவர் பலமுறை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 19 ஆம் தேதி தனது இரண்டு நண்பர்களுடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, கூட்டாளிகளுடன் தலைமறைவாக இருந்த மர்மநபர் ஒருவர் திடீரென அந்த மாணவியை கத்தியால் தாக்கியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவரை 13 வினாடிகளில் எட்டு முறை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சிறுமி கோபால்கஞ்சில் உள்ள சதர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை இழுக்க முயற்சிப்பதும் பின்னர் கத்தியால் குத்துவதும் அந்த சிசிடிவி காட்சி பதிவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் இதற்கு முன்பு பலமுறை தங்கள் சிறுமிக்கு தொல்லை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story