பஞ்சாப்பில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால்


பஞ்சாப்பில் அமைதியை சீர்குலைக்க சிலர் முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 23 Dec 2021 3:56 PM IST (Updated: 23 Dec 2021 3:56 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாப்பில் அமைதியை சீர்குலைக்க சிலர் நினைக்கின்றனர் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் லூதியானா கீழமை நீதிமன்றத்தில் இரண்டாம் மாடியில் உள்ள கழிவறையில் குண்டுவெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோ படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்தநிலையில்,  இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், 

குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூர குணமடைய விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்  டுவிட்டரில், 

"பஞ்சாப்பில் அமைதியை சீர்குலைக்க சிலர் நினைக்கின்றனர். பஞ்சாபின் மூன்று கோடி மக்கள் அவர்களின் திட்டங்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டார்கள். நாம் ஒருவருக்கொருவர் கைகளைப் பிடித்து கொள்ள வேண்டும்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் விழைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

Next Story