கேரளாவில் மேலும் 2,605- பேருக்கு கொரோனா


கேரளாவில் மேலும் 2,605- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Dec 2021 8:34 PM IST (Updated: 24 Dec 2021 8:34 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,605- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,605- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3,281- பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25,586- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பு விகிதம் 4.65 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பைக் கண்டறிய 55,928- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 46,203- ஆக  உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 534 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 496- பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 252- பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story