கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு - ராகுல்காந்தி கோரிக்கை


கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு - ராகுல்காந்தி கோரிக்கை
x
தினத்தந்தி 25 Dec 2021 2:56 AM IST (Updated: 25 Dec 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா இரண்டாவது அலையின்போது, உத்தரபிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் கங்கை நதியில் மிதந்ததாக ‘நமாமி கங்கை’ திட்டத்தின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இச்செய்தியை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-கொரோனாவால் இறந்தவர்களது வேதனையின் உண்மை, கங்கை நதியின் அலையில் மிதந்து கொண்டிருக்கிறது. அதை மறைக்க முடியாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதுதான் அவர்களுக்கு நீதி வழங்குவதற்கு முதல்படி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, கொரோனாவால் இறந்தவர்கள் உடல்கள் கங்கையில் வீசப்பட்டதை மறைத்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Next Story