ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்


ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம்,  எச்சரிக்கையுடன் இருங்கள்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Dec 2021 9:54 PM IST (Updated: 25 Dec 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை முற்றிலும் இல்லை என பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
  • நாட்டு மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
  • உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வருகிறது
  • நாம் அனைவரும் 2022- ஆம் ஆண்டுக்காக தயாராகி கொண்டு இருக்கிறோம். 
  • ஒமைக்ரான் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
  • இந்தியாவிலும் பலருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
  • ஒமைக்ரானை கண்டு பீதி அடைய வேண்டாம்,  எச்சரிக்கையுடன் இருங்கள்
  • இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயாராகி உள்ளன. 
  • முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவதை மறந்துவிடக்கூடாது. 
  • அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டு. 
  •  தடுப்பூசி செலுத்தும் திட்டம் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. 
  • மாநிலங்களிடம் கூடுதலான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 

Next Story