பீகாரில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படாது: நிதிஷ்குமார்
பீகார் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில் நாட்டில் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பீகார் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று முதல்-மந்திரி நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பீகாரில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளதால், இரவு நேர ஊரடங்கு தேவையில்லை. அதேநேரம், கொரோனா தொற்று அபாயம் எவ்வளவு காலம் நீடிக்கும், எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. எனவே, கொரோனா தொடர்பாக எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும், டாக்டர்களையும் அறிவுறுத்தியுள்ளேன்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக கடைப்பிடிப்பதை தவிர வேறு வழியில்லை. எனவே இது தொடர்பான விழிப்புணர்வு, மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.’
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story