இமாச்சல பிரதேசத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2021 5:06 PM IST (Updated: 26 Dec 2021 5:06 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சலப்பிரதேசத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

சிம்லா,

இமாச்சலப்பிரதேச மாநிலம் முதல் ஒமைக்ரான் தொற்றை பதிவு செய்துள்ளது. கனடாவில் இருந்து திரும்பிய பயணி ஒருவரை பரிசோதனை செய்ததில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதை அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.

ஒமைக்ரான் அச்சத்திற்கு மத்தியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் இமாச்சலத்தில் குவிந்துள்ளனர். தற்போது இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒமைக்ரான்  பரவியுள்ளது.


Next Story