மராட்டியத்தில் மேலும் 31 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 141 ஆக உயர்வு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2021 8:43 PM IST (Updated: 26 Dec 2021 8:43 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் புதிதாக 1,648 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

இந்தியாவில் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 430 தாண்டி பதிவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் கொரோனா கால கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்தி வருகின்றன. 

நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் மிக அதிகபட்சமாக ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக டெல்லியில் ஓமைக்ரான் பாதிப்பு அதிகம் உள்ளது.

இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 31 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளது. 

இதனிடையே மாநிலம் முழுவதும் இன்று மேலும் 1,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 17 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 918 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  65,02,957 ஆக அதிகரித்துள்ளது.  தற்போது வரை மாநிலத்தில் 9,813 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக மராட்டிய மாநிலத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இரவு நேரங்களில் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பொது நிகழ்ச்சிகளுக்குமான கட்டுப்பாடுகளையும் மராட்டிய அரசு அறிவித்துள்ளது. 

இதனிடையே  ஒமைக்ரான் பாதிப்பு எதிரொலியாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஒடிசா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story