இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் 2.8 ஆக பதிவு


இமாச்சல் பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் 2.8 ஆக பதிவு
x
தினத்தந்தி 26 Dec 2021 8:53 PM IST (Updated: 26 Dec 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

இமாச்சல பிரதேசம் மண்டி பகுதியில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் இன்று மாலை 6.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 2.8 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தரைமட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இன்று மதியம் 2.16 மணிக்கு ரிக்டர் 3.9 அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story