டெல்லியில் போலீசார் தடியடி; இந்திய மருத்துவ கூட்டமைப்பு நாளை போராட்டம்
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு நாளை போராட்ட அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் நீட் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். எனினும், இந்த சம்பவத்தில் வன்முறை ஏற்பட்டு உள்ளது.
இதில் ஐ.டி.ஓ. பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 7 போலீசார் காயம் அடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது, பணியில் இருந்த காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் பொது சொத்துகளை சூறையாடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்கள் மீது போலீசார் அத்துமீறி தடியடி நடத்தியுள்ளனர் என அனைத்து இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, வருகிற 29ந்தேதி (நாளை) காலை 8 மணி முதல் அனைத்து சுகாதார நல சேவைகளில் இருந்து விடுபட்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story