இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்வு...!
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
ஆக்டோபஸ் போன்று தனது அசுரக் கரங்களை விரித்துவரும் ஒமைக்ரான் கொரோனா வைரசின் பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 578-ஐ எட்டி இருந்தது. டெல்லியில் அதிகபட்சமாக 142 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. இரண்டாவது இடத்தில் உள்ள மராட்டியத்தில் 141 பேர் இத்தொற்றுக்குஉள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் தற்போதய நிலவரப்படி ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி மராட்டியத்தில் 167 பேருக்கும், டெல்லியில் 165 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், தெலுங்கானாவில் 55 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும், தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் 6 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், உத்தரகாண்டில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 2 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும், இமாச்சல பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும், மணிப்பூரில் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் இதுவரை 61 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 165 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story